நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சிறுவர்களும் சடலமாக மீட்பு
ஹுங்கம - களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்று அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பாடசாலை மாணவர்களும் நேற்று (31) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக நேற்று (30) சனிக்கிழமை மாலை மாணவர்கள் குழுவாகக் களமெட்டிய கடற்கரைக்குச் சென்று நீராடியுள்ளனர்.
இதன்போது, எதிர்பாராத விதமாக கடல் அலையால் இம்மூன்று மாணவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
பாவத்தை துறந்து சாமியாராக நினைத்தவர் செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ; கிணற்றுக்குள் கிடந்த பிறப்புறுப்பு
மாணவர்கள் காணாமல் போனதையடுத்து, பிரதேச கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவரின் சடலங்களும் கடற்கரையோரமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.