ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் தொடர்பில் வெளியான தகவல்

Helicopter Crash Tamilnadu Coonoor Bipin Rawat
By Sulokshi Dec 09, 2021 05:19 AM GMT
Report

தமிழகத்தின் குன்னூர் இடம்பெற்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று காலை அஞ்சலிக்காக வைக்கப்படஉள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.

கோவை விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை அவர்களது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு . நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பிபின் ராவத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்ட பின்னர் டெல்லி கண்டோன்மெண்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை அடுத்து, குன்னூருக்கு சென்ற தமிழக் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ராணுவ மையத்திற்கு சென்று விபத்து குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அங்கு வைக்கப்பட்ட புத்தகத்தில் முதல்வர் இரங்கல் குறிப்பை பதிவு செய்தார். அதில், தாய்த்திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் தானும் இணைந்து தனது வீர வணக்கத்தை செலுத்துவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங்கை சந்திக்க உள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தை இன்று முதல்வர் நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய திடம் இடம்பெற்ற குறித்த விபத்து இந்தியாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராணுவ ஹெலிகாப்பட்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடன் மரணமடைந்த ராணுவ வீரர்கள்,



GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US