மலர்கிறது மெகா கூட்டணி!
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.
இந்நிலையில், டலஸ் அணியினர் தனித்துவிடப்படவில்லை, அவர்களுடன் எமக்கு புரிந்துணர்வு இருக்கின்றது. விரைவில் அவர்கள் எதிரணியில் அமர்வார்கள் என நம்புகின்றோம்.
அனைவரும் இணைந்து பாரிய கூட்டணியை உருவாக்குவோம். அந்த கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுவார்.” எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடாது எனவும், கட்சியின் முடிவைமீறி கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை ஏற்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும்,நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திசைதிருப்பவே, போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video