தாதியை தாக்கிய தொகுதி அமைப்பாளர்
தாதி ஒருவரை கடந்த 21 ஆம் திகதி,தாக்கிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ, கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி, மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியை தொகுதி அமைப்பாளர் தாக்கியதாக கூறப்படுகின்றது.
கைதான சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் ரசான்ஜி ரத்நாயக்க முன்னிலையில் இன்று (26) அன்று ஆஜர்படுத்திய போது சந்தேக நபர் எச்சரிக்கப்பட்டு 2000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் , முறைப்பாட்டாளரும் சந்தேக நபரை அச்சுறுத்தியதாக சந்தேகநபர் நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.