புத்தகமாக வெளிவந்த கருப்பின பெண் வரலாறு; கடும் கோபமடைந்த வரலாற்றாளர்
1800 ஆம் ஆண்டில் அடிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட கருப்பின பெண் ஒருவரின் வாழ்க்கையை வரலாற்றாளர் ஒருவர் புத்தகமாக எழுதியுள்ளார்.
1800ஆம் ஆண்டில் வெள்ளையர் ஒருவரின் வீட்டில் ஜூட் இன்னும் கருப்பின பெண் வேலை செய்து வந்துள்ளார். அந்த கருப்பின பெண் அவருடைய எஜமான் வீட்டில் இரவு நேரத்தில் சமையலறைக்கு சென்று ஒரு துண்டு ரொட்டியையும், ஒரு துண்டு வெண்ணையையும் திருடி சாப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்ட வீட்டு முதலாளியின் மகள் ஜூட்டை பயங்கரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளார். அடியின் சித்திரவதையில் அந்தப் பெண் மறுநாள் உயிரிழந்துள்ளார்.
ஆனால் இந்த கொடூர சம்பவத்திற்கு கருப்பின பெண்ணின் முதலாளி வீட்டில் எவருக்குமே தண்டனை கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது 1800 இல் வாழ்ந்த கருப்பின பெண்ணான ஜுட்டின் வாழ்க்கை வரலாற்றை Sharon Robert Johnson என்னும் வரலாற்றாளர் புத்தகமாக எழுதியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, 1800 இல் வாழ்ந்த கருப்பினப் பெண் அடிமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு குற்றவாளிகளுக்கு எவருக்குமே தண்டனை கிடைக்கவில்லை.
இதைக் கேட்டதும் எனக்கு கடுமையான கோபம் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வெள்ளையர் ஒருவர் கம்புடன் மார்பை மறைக்காமல் இடுப்பளவு மட்டும் உடையணிந்த ஒரு கருப்பின பெண்ணை அடிப்பது போன்ற சிலை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.