யாழ். பல்கலையில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜீலை நினைவேந்தல்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழ் . பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது.
கடந்த ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களின் நினைவாக பல்கலை மாணவர்களால் கறுப்பு ஜீலை நினைவேந்தல் நினைவுகூரப்பட்டது.
இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
இதன்போது யாழ் .பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுத்தூபிக்கு அகவணக்கம் செலுத்தி ,தீபம் ஏற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
மேலும் 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.