1 பில்லியன் டாலர், அழகான பெண் ; இராணுவ தளபதியின் வினோத கோரிக்கை
சோமாலியாவில் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உகாண்டா ராணுவம் நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் பங்களிப்பிற்கான ஊதியமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா துருக்கியிடம் கேட்டுள்ளார்.
அதோடு நிற்காமல், அந்நாட்டின் மிக அழகான பெண்ணைத் தனக்கு மணம் முடித்துத் தரவேண்டும் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஒரு மாதத்திற்குள் இக்கோரிக்கைகளைத் துருக்கி நிறைவேற்றாவிட்டால், கம்பாலாவில் உள்ள துருக்கியத் தூதரகம் மூடப்படும் என்றும், உகாண்டா வான்வெளியில் துருக்கி ஏர்லைன்ஸ் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உகாண்டா ராணுவ தளபதியின் இந்த வினோத கோரிக்கை பரப்பை கிளப்பியுள்ளது.