கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் மர்ம மரணம்; இன்று வெளியாகவுள்ள உண்மைகள்!
பெலவத்தை வீட்டின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர ஆடை வர்த்தகரின் பிரேத பரிசோதனை இன்று (06) சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது.
உயிரிழந்தரது டிஎன்ஏ பரிசோதனையும் அங்கு நடைபெற உள்ளது. பிரேதப் பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த நிலையில், சடலம் நீரில் மூழ்கியதால், உறவினர்களால் அடையாளம் காண முடியாததால், இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இளம் தம்பதி கைது
இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான இளம் தம்பதியினர் நேற்று (05) பிற்பகல் கந்தானை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கைதானவர்கள் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருகலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும் பின்னர் அவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி தோல்வியடைந்ததும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைதான சந்தேகநபர்கள் இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இரு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You My Like This Video