வியக்க வைத்த தாய்ப்பாசம்; மெய்சிலிக்க வைக்கும் 19 வயது இளைஞன்!
இந்தியா பீகாரை சேர்ந்த 19 வயது இளைஞன் (Monu Meturbala) தனது தாயாருக்காக செய்யும் ஆன்மீக பயணம் சமூகவலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது.
இந்தியா பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மோனு மேதுர்பாலா (Monu Meturbala), தனது தாயார் தீவிர நோயிலிருந்து குணமடைய வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டி, நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் ஓடி சென்று தரிசனம் செய்யும் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றமை கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 50 கிலோமீட்டர்கள்
மோனு மேதுர்பாலா (Monu Meturbala) தாயார் தீவிரமாக நோய்வாய்ப்பட்டபோது, அவர் குணமடைந்தால் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் ஓடிச் சென்று தரிசிப்பதாக மோனு வேண்டிக்கொண்டார்.
தாயாரின் உடல்நலம் மேம்பட்டதை அடுத்து, மார்ச் 15, 2026 அன்று தனது பயணத்தைத் தொடங்கினார் எந்த வாகன உதவியும் இன்றி, ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 50 கிலோமீட்டர்கள் ஓடுகிறார்.
அந்தவகையில் இதுவரை சுமார் 8,000 கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடந்து, 5 ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்துள்ளதாக கூறப்படுகின்றது. இவரின் தீவிர பக்தி மற்றும் தாயார் மீதான அன்பைக் கண்டு பலரும் இவரை நவீன 'ஷ்ரவன் குமார்' என்று பாராட்டி வருகின்றனர்.
செல்லும் வழியெல்லாம் மக்கள் இவருக்கு உணவும் தங்குமிடமும் அளித்து உதவிகள் செய்து வருகின்றதுடன் சமூகவலைத்தலங்களில் மோனு மேதுர்பாலா (Monu Meturbala) அதிக கவனத்தை பெற்றுள்ளார்.