பிக் பாஸ் சீசன் 9; களமிறங்கும் சின்னத்திரை பிரபலங்கள் ; அப்ப சரவெடிதான்
தொலைக்காட்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகியுள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 9, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோவுடன் வெளிவரும் என்று குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
காத்திருக்கும் ரசிகர்கள்
வெளியான தகவலின்படி, 9வது சீசனில் கலந்துகொள்ளும் சில போட்டியாளர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் சின்னத்திரை பிரபலங்களாக உள்ளனர்.
இதனால் அடிதடிகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது.
இம்முறை பிக் பாஸ் சீசன் 9, ரசிகர்களுக்கு மேலும் அதிக அதிர்வுகளை தரும் என நிச்சயம் கூறலாம். வரவிருக்கும் புரொமோவும், போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போகின்றன.