பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ; முதல் போட்டியாளராக களமிறங்குவது இவரா?
விஜய் டிவி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எதிர்பார்க்கப்பட்ட பட்டியல் இணையத்தில் வலம் வருகிறது.
அதில் முதல் போட்டியாளராக பிரபல செய்தி வாசிப்பாளர் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாத்திமா பாபு, அனிதா சம்பத் மற்றும் லாஸ்லியா போன்ற முந்தைய சீசன்களில் செய்தி வாசிப்பாளர்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தார்கள் . அந்தவகையில் .
தற்போதைய தகவல்களின்படி, 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரபல செய்தி வாசிப்பாளரான ரஞ்சித்தை அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சூப்பர் டூப்பராக வெற்றி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்தது.
முதல் சீசனில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வரைக்கும் ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. வேறு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் பல சீசன்களை கடந்து விட்டது.
இந்நிலையில் இன்னும் சில வாரங்களுக்குள் அதாவது செப்டம்பர் முதலில் அல்லது இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் நடிகைகள் செய்தியாளர்கள், திருநங்கைகள், அரசியல் பிரமுகர் என்ற கேட்டகிரியில் இந்த சீசனிலும் சர்ச்சைக்குரிய பல போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது