பிக் பாஸ் சீசன் 10 ; சட்டசபையான வீடு! வெளிநடப்பு செய்த முனியம்மாள்
இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 10 நிகழ்ச்சி நேற்று (06) மாலை தொடங்கியது. இதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளான இன்று (07), கேப்டன் தேர்வு நடைபெற்ற Promo வீடியோ வெளியானது.
அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது Promo வீடியோவில் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக 'Democracy room' என்பதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளும் அணி - எதிர் அணி என இரு தரப்பு
இதில் ஆளும் கட்சி - எதிர்கட்சி என சட்டமன்றத்தில் உள்ளது போலவே, ஆளும் அணி - எதிர் அணி என இரு தரப்பு உள்ளது. இதற்கு தலைவராக ஷதிகா உள்ளார்.
இந்நிலையில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஷதிகா முறைத்துக்கொண்டு, Rough-ஆக Democracy room-ஐ வழிநடத்த வேண்டாம் என முனியம்மாள் கூற, உங்கள மாறி ஒரு ஆள உக்கார வெச்சிருந்தா அது மாறத்தான் செய்யும்' என ஷதிகா கூறுகிறார்.
இதனால் Democracy room-லிருந்து முனியம்மாள் உடனடியாக தான் வெளிநடப்பு செய்கிறேன் என கூறிவிட்டு வெளியேறுகிறார்.