பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? விறுவிறுப்பாக செல்லும் ஓட்டிங்
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ராம், ஆயிஷா இருவரும் எவிக்சனில் வெளியேறினர்.
இந்த நிகழ்ச்சி எஞ்சியிருக்கும் 11 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள நேற்றைய போட்டியில் காலையில் இருந்தே பரபரப்பு காணப்படுகிறது.
அந்த வகையில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை எவிக்சனுக்கு நாமினேட் செய்தனர்.
அதன்படி, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரச்சிதா ஆகியோர் சக போட்டியாளர்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
அதனால், இந்த வாரம் போட்டி முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அத்தோடு இந்த வாரத்தின் தலைவராக மைனா நந்தினி தேர்வாகியும் உள்ளார்.
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்களிடம் காணப்படுகின்றது.
தற்பொழுது வெளியாகியிருக்கும் ஓட்டிங் விபரத்தின் படி இந்த வாரம் மணிகண்டன் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.