கதறி அழுத ஜிபி முத்து... பிக் பாஸில் நடந்தது என்ன? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைவரையும் தொடர்ந்து கவர்ந்து வருபவர் ஜிபி முத்து. பிக்பாஸ் வீட்டில் இவரது செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இவருக்காக தனியாக ஆர்மி துவங்கும் அளவிற்கு இவர் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஜிபி முத்துவை கலாய்க்கும் அவரிடம் சண்டை போடும் சக போட்டியாளர்களை வைத்து செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் திகதி பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது.
இன்றைய தினம் 4வது நாளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல யூடியூபர் ஜிபி முத்து தன்னுடைய கள்ளங்கபடமற்ற செயல்பாடுகளால் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவருக்காக ரசிகர்கள் ஆர்மி துவங்கும்வகையில் இவர் அனைவரையும் கவர்ந்துள்ளார். பிக்பாஸ் போட்டியாளர்கள் தினந்தோறும் இவரை கலாய்த்தும் இவரிடம் சண்டையிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் ஜனனி, ஆயிஷா மற்றும் தனலட்சுமி போன்றவர்கள் ஜிபி முத்துவிடம் சண்டை போட்டுள்ளனர்.
அந்த வகையில் தனலட்சுமி, ஜிபி முத்துவிடம் தொடர்ந்து சண்டையிட்டதால், ஜிபி முத்து ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள், தனலட்சுமி நிகழ்ச்சியில் இருந்து விரைவில் வெளியேறுவர் என்று ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வாரமே இது நடக்கும் என்றும் கூறிவருகின்றனர். ஜிபி முத்துவை அழவைத்த தனலட்சுமியும் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில்தான் இருந்தார். அவரை வைத்து ரசிகர்கள் மீம்ஸ் மற்றும் கமெண்டகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் ஒருபுறம் இதுபோல செய்துவர பிரபலங்களும் இதில் இணைந்துள்ளனர்.
பிரபல நடிகையும் கணேஷ் வெங்கட்ராமின் மனைவியுமான நிஷா, பிக்பாஸ் அண்ணனையே அழ வச்சுட்டாங்களே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Watching Bigg Boss for 1 person..Thalaivarreee GP Muthu ?❤️
— Madan Gowri (@madan3) October 13, 2022
இதனிடையே பிரபல யூடியூபர் மதன் கௌரியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜிபி முத்துவிற்காக மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் ஜிபி முத்துவால் மட்டுமே அதிகமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருவதாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.