பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் லாஸ்லியாவா இது! இப்படி ஆளே மாறிட்டாங்களே
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த மாதம் கோலகலமாக நடந்து முடிந்தது.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தான் இலங்கைப் பெண்ணான லாஸ்லியா.
இவர் இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றில் வாசிப்பாளராக இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் இவர் பேசும் தமிழும், அழகான சிரிப்பும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதேவேளை பிக்பாஸ் டைட்டில் வின்னராக லாஸ்லியா வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லாஸ்லியா இடைநடுவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
பின்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய லாஸ்லியாக்கு அடுத்தடுத்து படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது.
இவ்வாறான நிலையில் லாஸ்லியா ஃப்ரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா இடையிடையே பல்வேறு இடங்களுக்கும் சென்று போட்டோசூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
துபாய் சென்ற லாஸ்லியா அங்கே தனது தோழியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.