பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்! பரபரப்பு வீடியோ
தமிழில் கடந்த ஒக்டோபர் 9-ம் திகதி கோலாகலமாக தொடங்கி 52 நாட்களாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.
இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், இதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் விட்டில் 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதில், இந்த வாரம் பழங்குடியினருகும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து அசீம் அடிடா பார்ப்போம் என்று எகிறி வந்ததாக ஷிவினிடம் அமுதவாணன் கூறுகின்றார்.
#Shivin says red card is confirmed if #Azeem has beaten #Amudhavanan...and #Amudhavanan is pretty sure about itpic.twitter.com/h709EdMmqm#BiggBossTamil6
— Dr. Ilavarisirk 2.0 (@I_i_ilavarisirk) November 30, 2022
இதனால் ஷிவின் பிக்பாஸிடம் போய் சொல்லுங்க அசீமுக்கு ரெட் கார்டு கொடுப்பாங்க என்று கூறியுள்ளார்.
இதனால் அசீம் வெளியேற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.