இரகசிய அறையில் உள்ளாரா இந்த முக்கிய போட்டியாளர்? Hotstar பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 79 நாட்களை கடந்துள்ளது.
இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 12 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். தற்போது 9 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.
இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அமுதவாணன் மற்றும் Adkவை தவிர அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சித்தா, கதிரவன் ஆகிய 7 பேர் நாமினெட் ஆகி இருந்தனர்.
இதில் கதிர், ரச்சிதா அல்லது மைனா நந்தினி தான் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் முக்கிய போட்டியாளரான தனலட்சுமி வெளியேறி இருந்தார்.
இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி.
மேலும் இவர் சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார்.
இவர் பிக்பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார்.
பொதுவாக பிக்பாஸில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களை அவர்கள் வெளியேறிய அடுத்த நாளே லைவில் பேட்டி எடுத்து ஹாட் ஸ்டார் வெளியிடும். ஆனால், தனலட்சுமி வெளியேறி இத்தனை நாட்கள் ஆகியும் அவரது லைவ் மட்டும் இன்னும் வரவில்லை.
மேலும் இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் அளித்திருக்கும் டிஸ்னி ஹாட் ஸ்டார் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனலட்சுமி உடன் லைவ் செல்ல முடியவில்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறது.
ஏற்கனவே தனலட்சுமி வெளியேற்றம் Unfair என்று ரசிகர்கள் பலரும் கூறியவர்க்கும் நிலையில் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரின் இந்த விளக்கமும் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது.
மேலும், பிக்பாஸில் இருந்து வெளியேறிய தனலட்சுமி இது வரை எந்த ஒரு வீடியோவையும் வெளியிடவில்லை. இதனால் அவர் ஒருவேளை இரகசிய அறையில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் பலர் கமண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், தனலட்சுமி ஒரு பேட்டியில் பங்கேற்று இருக்கிறார் அது விரைவில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பித்தக்கது.
