பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீமின் அடுத்த திட்டம் இதுதானா? அவரே கூறிய தகவல்
தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசனின் கிராண்ட் ஃபினாலே நேற்றைய தினம் (22-01-2023) பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இவ்வாறான நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் எஞ்சி இருந்த இறுதி போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அசிம் ஆகியோரிடம் கலந்துயாட பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அப்போது டிவியில் இருக்கும் கமல், வீட்டுக்குள் நுழையும் அந்த கமலை பார்த்து, “அங்கயுமா?” என ஆச்சரியப்பட, பின்னால் திரும்பிப் பார்த்த இறுதி போட்டியாளர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தனர். இதன் பின்னர்தான் அது ப்ரீ ரெக்கார்டு செய்யப்பட்ட காணொளி போல என ஷிவின் உணர்ந்துச் சொன்னார்.
அதன் பின்னர் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல், மூவருக்கும் தம் சார்பில் நெகிழ்ச்சியுடன் ஒரு வாழ்த்துக் கடிதம் கொடுத்திருந்தார். பின்னர் வெளியில் சென்று யார் யார் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என கமல்ஹாசன் அவர்களிடம் வினவினார்.
மேலும் இதில் அசிம் கூறும்போது,
“மீடியா மற்றும் சின்னத்திரையில் எனது 14 வருச போராட்ட வாழ்வுக்கு பின், எனது அடுத்த கட்ட திரை வாழ்க்கைக்கு பிக்பாஸ் உதவும் என்கிற நம்பிக்கையுடன் வந்தேன். அது நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், அசீம், தமது அடுத்த கட்ட திரை வாழ்க்கை என சொல்வது வெள்ளித்திரையா? என கேள்விகள் கேட்டு வருவதுடன், பலரும் அசீம் வெள்ளித்திரைக்கு வர இப்போதே தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.