பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் திடீர் திருமணம்!
பிக்பாஸ் மூலம் பைரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை தான் சாக்ஷி தற்போது காதலித்து கரம்பிடித்து இருக்கிறார்.
படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். ஹீரோயினாகவும் பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். கவின் மற்றும்லோஸ்லியா காதல் ட்ராக் காரணமாக, சாக்ஷி அகர்வால் அந்த சீசனில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சாக்ஷிக்கு கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறார்.
சர்ப்ப்ரைசாக சாக்ஷி அகர்வால் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் இணையவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.