பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா: களமிறக்கப்படும் புதிய போட்டியாளர்....யார் தெரியுமா?
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின 5வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் முதல் முறையாக திருநங்கை ஒரு போட்டியாளராக பங்கேற்றார் அவர் தான் நமீதா மாரிமுத்து. தற்போது இவர் தவிர்க்க முடியாத சில உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக பிக் பாஸ் சீசன் தொடங்குவதற்கு முன்பு சகிலா அவர்களின் மகள் மிலா, தான் முதல் திருநங்கையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென நமீதா மாரிமுத்து அவர்கள் போட்டியாளராக பங்கேற்றார்.
தற்போது நமீதா மாரிமுத்து விலகிய காரணத்தினால் அவரது இடத்தில மற்றொரு திருநங்கையான மிலா, அவர்கள் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
