பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா?....வெளியான தகவல்
பிக் பாஸ் சீசன் 5 கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நாளுக்கு நாள் ஏற்படும் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் வார சம்பளம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி பிக்பாஸ் வீட்டில் அதிகபட்சமாக அபிநய் ஒருவாரத்திற்கு 2.75 லட்சம் சம்பளம் வாங்குகிறார். இவருக்கு அடுத்து காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதாவிற்கு 2.5 லட்சம் வாரம் கொடுக்கப்படுகிறது.
அதையடுத்து இமான் அண்ணாச்சிக்கு 1. 75 லட்சம் வழங்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து ராஜுக்கு ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும் பிரியங்காவிற்கு 1.2 லட்சம் கொடுக்கப்படுகிறது.
பிரியங்கா போல் பாவனிக்கும் வாரம் 1.2 லட்சம் வழங்கப்படுகிறது. இசைவாணி மற்றும் வருண் இருவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்படுகிறது.
அக்ஷரா, ஐக்கி, தாமரை, சிபி, நிரூப் ஆகிய ஐவருக்கும் ஒரு வாரத்திற்கு தலா 70 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளத்தை அறிந்த ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா என ஆச்சரியப்படுகிறார்கள்.