பிக் பாஸ் சட்டசபை; பல்டி அடித்த விஜய் சேதுபதி!
சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
அவர் மறைமுகமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயைத்தான் விமர்சிக்கிறார் என நினைத்த அவர்கள் விஜய் சேதுபதி முகம் தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.
விஜய் சேதுபதி திமுகவின் ஆதரவாளர் கடந்த திமுக ஆட்சியில் அவர் எதுவுமே வாய்ஸ் பேசவில்லை ஆனால் தற்போது பேசுகிறார் என அவர்கள் கருத்து தெரிவித்தனர் .
சில தவெக எம்.எல்.ஏக்களும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியிருந்தனர்.
இந்நிலையில், இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி ‘நான் பேசும் கருத்துக்கள் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. வெளியில் இருக்கும் ஒரு தனி நபரையோ, அல்லது அமைப்பையோ சாராது.
நான் சொல்லாமலே இது மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தற்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.