பிக் பாஸ் சீசன் 5; நிகழ்ச்சியில் முக்கிய மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
கமலஹாசன் துகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் திபாவளியை முன்னிட்டு தீபாவளி அன்று தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முந்தைய வருடங்களில் ஜூலை மாதம் ஆரம்பித்து முடிந்து விடும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்தில் தாமதமாக தொடங்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்திருப்பதால் பல பண்டிகைகளை போட்டியாளர்கள் வீட்டிற்குள் கொண்டாடி வருகின்றனர்.
சீசன் 5ல் நமீதா மாரிமுத்து, இசைவாணி, ராஜு, மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, அபிஷேக், ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நாடியா, நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் திருநங்கை நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து நாடியா, அபிஷேக் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர். ஆரம்பத்தில் நிகழ்ச்சி சலைப்படைய வைத்திருந்தாலும் தற்போது கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் பாவ்னி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் உள்ளனர். இதனிடையே தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோட் தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பல்வேறு ஜாலியான டாஸ்க்குகளும் இதன்போது போட்டியாளர்களுக்கு கொடுப்பார்கள் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.