பிக்பாஸ் சீசன் 5; நாடியா சிங்கிற்கு இத்தனை குழந்தைகளா? மூக்கில் விரல்வைக்கும் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நாடியா சிங் குடும்ப புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நாடியா சிங், மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர்.
இவர் தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமாகிய நிலையில், டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டவுடன் யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகி வருகிறார். மலேசியாவில் பிறந்த வளர்ந்த இவர் தனது பள்ளி படிப்பை மலேசியாவில்தான் முடித்தார்.
இவருக்கு தமிழ் மொழி மீது அதீத காதல் என்பதால் இவருடைய டிக்டாக் வீடியோ எல்லாமே தமிழை சார்ந்ததாக இருக்கும். அத்துடன் நாடியா சிங்கிற்கு நடிப்பு என்றால் கொள்ளை பிரியமாம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளார்.
குறிப்பாக தளபதி விஜய் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது இவரது வாழ்நாள் லட்சியம் என்று கூறப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு மலேசியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாடியா சிங்கிற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நாடியா சிங்கிற்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள விஷயம் பலருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கணவர் மற்றும் குழந்தைகளுடன் நாடியா சிங் உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவர் தனது கணவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.