பிக்பாஸ் ஜூலி பொலிஸில் பரபரப்பு புகார்!
பிக்பாஸ் ஜூலியை காதலிப்பதாக கூறி ஏமாறியதாக வாலிபர் மீது பொலிஸில் ஜூலி புகார் அளித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பிரபலமானவர் மரியா ஜூலியானா (26). அதன் பின்னர் ஜூலி பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்று மிகப் பிரபலமானார். சென்னையில் வசித்து வரும் ஜூலி, நேற்று இவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் காதலன் மீது மோசடி புகார் கொடுத்தார்.
அதில், சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் (26) என்பவரும் ஜுலியும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஜூலியை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக பழகி வந்த மனிஷ், ஜூலியிடம் இருந்து 2.30 இலட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பல்சர் பைக், இரண்டு சவரன் தங்க செயின் மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் மதத்தை காரணம் காட்டி ஜூலியை மனிஷ் பிரேக் அப் செய்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு ஜூலியை அவர் தொந்தரவு செய்து வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்ந்துவிட்டு ஏமாற்றுவதாக மனிஷ் மீது, ஜூலி புகார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஜூலி வருவதற்கு முன்பு வரை சமூகஊடகங்களில் ‘சிங்கப்பெண்’ என்று நெட்டிசன்களால் அழைக்கப்பட்டு வந்த ஜூலி அதற்கு பின்னர் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.
எனினும் , ‘அம்மன் தாயி’ என்ற திரைப்படத்தில் நடித்து டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.