கேரளா தங்கக்கடத்தல் வழக்குடன் பிக் பாஸ் போட்டியாளருக்கு தொடர்பா?
கேரளா கடத்தல் வழக்கில் விசாரிக்கப்பட்ட ஸ்ராவ்யா சுதாகர் தான் தற்போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அக்சரா ரெட்டி என்ற தகவல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது தந்தை மற்றும் சகோதரர் குறித்து பேசிய அக்சரா. இந்த தங்க கடத்தல் வழக்கு தொடர்பில் எதுவும் பேசவில்லை. மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்றும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியில் ஸ்ராவ்யா சுதாகர் என்ற பெயரில் தான் இவர் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சம்ந்தப்பட்ட அக்சரா ரெட்டி தரப்பில் இருந்து விளக்கமளித்தால் மட்டுமே தெரியவரும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.