யாழில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி: புன்னகையுடன் பதிலளித்த சிவாஜி மகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் யாழிற்கு வருகை தந்திருந்தாகவும் அதன் பின்னர் தமது குடும்பத்தில், தானே யாழ்ப்பாணத்திற்கு முதன் முறையாக வருகை தந்துள்ளதாகவும் சிவாஜி மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (23-04-2023) சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு மகிழச்சி வெளியிட்டிருந்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் யாழிற்கு வருகை தந்த போது மூளாய் வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கியிருந்தாகவும் யாழ்ப்பாண மக்கள் மீது அளவில்லான அன்பு வைத்திருந்தாகவும் ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் பாரதிய ஜனாதா கட்சியில் அங்கத்தவராக உள்ளீர்களா என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் ஆம் என புன்னகையுடன் பதில் அளித்துள்ளார்.