பேருந்தில் பாடசாலை மாணவியின் மோசமான செயல்
கடந்த 5ஆம் திகதி காலை 7 மணியளவில் கொரள இமவிலிருந்து பிலியந்தலை நோக்கிச் சென்ற பேருந்தில் பாடசாலைச் சீருடையில் இருந்த ஒரு மாணவி பேருந்தில் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொல்கஸ் ஓவிட்ட பகுதியில் பேருந்தில் ஏறிய இளம் தம்பதியினரிடம், அதிக நெரிசல் காரணமாக முன்பக்க இருக்கையில் பாடசாலைச் சீருடையில் இருந்த ஒரு மாணவி அவர்களின் பயணப் பையை வாங்கி வைத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

வேறு பேருந்தில் ஏறிய தம்பதி பையைத் திறந்தபோதே அதிர்ச்சி
சீருடையில் இருந்ததால் தம்பதியினரும் சந்தேகமின்றி பையைக் கொடுத்துவிட்டு பேருந்தின் நடுப்பகுதிக்குச் சென்றுள்ளனர் கெஸ்பேவ பகுதியில் இறங்கி, கொழும்பு செல்லும் வேறு பேருந்தில் ஏறிய தம்பதியினர் கட்டணம் செலுத்த பையைத் திறந்தபோதே அதிர்ச்சியடைந்தனர்.
பையிலிருந்த பணப்பையில் வைக்கப்பட்டிருந்த ₹3,000 பணம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் திருடப்பட்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக, பையின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கைப்பேசியும், வேறு தேவைக்காக வைக்கப்பட்டிருந்த பணமும் திருடப்படவில்லை.
பாடசாலை மாணவி வேடத்தில் வந்து பயணிகள் நெரிசலைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.