முற்றுகையிடப்பட்ட நடமாடும் எரிபொருள் நிலையம் ; இரகசியத் தகவலால் அம்பலமான தகவல்
நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த நடமாடும் எரிபொருள் நிலையம் ஒன்றை கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஹேன பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, 1,235 லீட்டர் டீசல், இறைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட டீசல் தொட்டி மற்றும் ஒரு லொறி என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு வரக்காபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரகசியத் தகவல்
தோலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த முற்றுகை நடத்தப்பட்டது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியை நோக்கியுள்ள சந்தேகநபருக்குச் சொந்தமான காணியில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அந்த லொறியின் பின்புறத்தில் டீசல் விநியோகத்தை எளிதாக்கும் வகையில் மீற்றருடன் கூடிய இறைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. அங்கிருந்த டீசல் தொட்டியிலிருந்து 1,235 லீட்டர் டீசலும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.