தவிக்கவிட்டுச் சென்ற கணவன்; மூன்று பெண்பிள்ளைகளுடன் கண்ணீரில் தவிக்கும் இளம்தாய்!
தாயகத்தில் உள்நாட்டு போரின் வடுக்கள் மாறாது தமிழர் பகுதியில் இன்னும் மக்கள் ரணங்களுடனே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
போரின் அழிவு ஏற்படுத்திய பாதிப்புக்கள் ஒரு புறமும், தொடர்ந்து வந்த கொரோனா ஒருபுறமும் , அதனை தொடர்ந்து ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி ஒரு புறமுமாக மக்களின் வாழ்வு வலியுடன் நகர்ந்துகொண்டே இருக்கின்றது.
இத்தனை கஸ்ரங்களுக்கு மத்தியிலும் மது போதையால் ஏற்படும் குடும்ப தகராறு காரணமாக கணவன் கைவிட்டுச்சென்ற நிலையில் கண்ணீருடன் வசிக்கும் தாயொருவரின் வலியை சொல்வதாக இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் வசித்துவரும் அந்த இளம் தாயார் , தன் முயற்சியினால் சிறு வாழ்வாதரத்தை கொண்டு நடத்தும் அந்த இளம் தாயார் தனது மூன்று பெண்பிள்ளைகளுடன் வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் முன்னெடுக்கப்படும் நம் உறவுப்பாலம் நிகழ்ச்சி அவர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் என்பது திண்ணம்.