அனைத்து பிரச்னைகளுக்கும் நிவாரணம் தரும் மாதுளை
மாதுளம்பழத்தை தினசரி உட்கொள்ளும் போது பல பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கப் பெறுகிறது.
மாதுளையின் சிவப்பு விதைகள் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றது.
தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
மாதுளையில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
அத்தோடு மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவகையாக காணப்படுகின்றது.
இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
அதனால்தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகின்றது.
ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தினமும் ஒரு மாதுளையை சாப்பிடுவது அவசியம்.
வீக்கம் பிரச்சனை நீங்கும்
தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் அல்லது அதன் சாறு குடித்து வந்தால் உடலில் ஏற்படும் வீக்கம் பிரச்சனை நீங்கும்.
அத்தோடு உடல் வலியிலிருந்தும் விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
இதய நோய்களுக்கு நிவாரணம்
மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
ஏனெனில் மாதுளையில் உள்ள பாலிஃபீனாலிக் கலவைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
எனவே பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால் மாதுளையை தினமும் உட்கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்
உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கும் போது மாதுளையில் உள்ள கலவை தமனிகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.
அத்தோடு இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
எனவே இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.
தோல்களில் ஏற்படு தழும்புகள் குணமாகும்
மாதுளம் விதைகள் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும் அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாவதோடு தழும்புகளும் மறையும்.
கருவுறுதல் பிரச்னை நீங்கும்
திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம்.
ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
மூட்டுவலி நீங்கும்
மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும்.
இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம்.
அது உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.