அமேசானில் பொருட்கள் ஓடர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; பார்சலில் வந்த கொடிய விசப்பாம்பு!
இந்தியாவில் அமேசானில் பொருட்கள் ஓடர் செய்தவருக்கு பார்சலில் விசப்பாம்பு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, உணவு உட்பட வீட்டின் அனைத்துப்பொருட்களையும் ஒன்லைனில் ஓடர்செய்யும் பழக்கம் தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது.
பார்சலில் வந்த கொடிய விசப்பாம்பு
ஆடை அணிலககள் முதல் சாப்பாடுவரை தற்போது பெரும்பாலானவர்கள் ஒன்லைன்தான் கொள்வனவு செய்கின்றனர். அந்தவகையில் உலகம் முழுவது பிரபலமானது அமேசான் தளம். இந்நிலையில் இந்தியாவின் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் தளத்தில் பொருட்களை கொளவனவு செய்துள்ளார்.
மென்பொருள் பொறியாளர்களான தம்பதியினர், ஆன்லைனில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்திருந்தனர், ஆனால் அவர்களது பேக்கேஜுக்குள் நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டிற்கு வந்த பார்சலை வாடிக்கையாளர் ஆர்வமுடன் திறந்தபோது அதற்குள் விஷப் பாம்பு உயிருடன் இருப்பதைக் கண்டு அதிச்சியடைந்துள்ளார்.
A family ordered an Xbox controller on Amazon and ended up getting a live cobra in Sarjapur Road. Luckily, the venomous snake was stuck to the packaging tape. India is not for beginners ?
— Aaraynsh (@aaraynsh) June 18, 2024
pic.twitter.com/6YuI8FHOVY
அந்த விஷப் பாம்பு அதிர்ஷ்டவசமாக பேக்கேஜிங் டேப்பில் சிக்கியதால், பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.
தம்பதியினர் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.