கோடை வெப்பத்தில் ஏற்படும் சூட்டை தனிக்கும் சப்ஜா விதை
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடானது உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது.
இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம் என்று கூறப்படுகிறது.
சப்ஜா விதை
செடி சப்ஜா விதையானது துளசி இனத்துடன் சேர்ந்தது. இதனை திருநீற்றுப்பச்சை என்றும் அழைக்கின்றனர்.
இயற்கையாகவே நல்ல நறுமணம் கொண்ட இந்த செடியில் இதன் விதைகளை பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்கின்றனர்.
இதன் இலைகளை பேசில் என்றும் அழைக்கின்றனர்.
சப்ஜா இலை பயன்கள்
இதில் உடலிற்கு தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி உள்ளது. மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் சப்ஜா இலையை சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்.
ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்கும் போது மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் போன்றவை நீங்கும்.
இது பூச்சிகளை கொல்லுவதோடு சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள் இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம்.
எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.
சளி காது வலியை போக்கும்
சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது.
சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும்.
காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.
முகப்பருக்களை போக்கும்
டீன்ஏஜில் பெரும்பாலான பெண்கள் முகப்பருவால் அவதிப்படு கிறார்கள்.
அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும்.
தழும்புகளும் மறையும். சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.
இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.
குடல் புண்களுக்கு நிவாரணம்
ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும்.
நெஞ்செரிச்சலையும் போக்கும்.