முளை கட்டிய தானியங்கள் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறையில் பலர் சர்க்கரை நோயை என்னும் நீரிழிவு நோய் (diabetes), இதய நோய்கள், கண் பார்வை பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
சர்க்கரை நோயில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இதனால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) கட்டுக்குள் இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முளை கட்டிய தானியங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
முளை கட்டிய தானியங்கள் ஊட்டச்சத்தின் முக்கியமான ஒன்று, அதன் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் : ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், முளை கட்டிய தானியங்களில் காணப்படுகிறது. இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தமனிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்க செய்யும் : முளை கட்டிய தானியத்தில், வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் புரத சத்து உள்ளதால், உங்கள் கண்பார்வையை கூர்மையாக்க உதவுகிறது. முளை கட்டிய தானியத்தில் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. இது உங்கள் கண்களின் செல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
எடையைக் குறைக்க பெரிதும் உதவும் : முளை கட்டிய தானியங்களை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவுகிறது. முளை கட்டிய தானியங்களில் கலோரிகள் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதன் காரணமாக எடை கட்டுக்குள் இருக்கும்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்: முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதுடன், இரும்பு சத்தும் அதிகரிக்கிறது. இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்பதோடு, உறுப்புகள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் சென்றடவதை எளிதாக்குகிறது.