வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால் இவ்வளவு நல்லதா? இது தெரியாம போச்சே!
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலில் நீர் சத்து குறையாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது.
நீர் சத்து பற்றாக்குறை காரணமாக தலைவலி, மலச்சிக்கல், மூட்டு வலி, அஜீரணம், குறைந்த ரத்த அழுத்தம், அஜீரணம் போன்ற பல பிரச்னைகள் வரலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை கொடுக்கிறது.
நீர் குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள்
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த பானமான இது, உடல் எடையை குறைப்பது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை கொடுக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது, உடல் உள் உறுப்புகள் சுத்தமடைந்து, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதனால் உடல் புத்துணர்வு பெறும். எனவே இதனை சிறந்த டீடாக்ஸ் பானம் எனலாம்
உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், சோர்வு ஏற்படுகிறது. சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும். மூளை திசுக்கள் சுமார் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது.
நீரிழப்பு காரணமாக, உடல் மட்டுமின்றி, மூளையும் சோர்வடைவதால் மன அழுத்தம் உண்டாகிறது. வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் மூலம், மன நிமலையை மேம்படுத்தி, மூளையை சுறுசுறுப்பாக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுகள், கொழுப்புகள் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். இதனால், உடல் எடை குறைவதோடு, செரிமான அமைப்பும் மேம்படுகிறது.
நீர் சத்து பற்றாக்குறை தலைமுடி முடியின் வறட்சி மற்றும் உயிரற்ற தன்மைக்கு முக்கிய காரணம். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது கூந்தலின் வறட்சியைப் போக்க உதவுகிறது மற்றும் தலைமுடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடித்தால், உங்கள் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் அதிகரிக்கும். இதன் காரணமாக குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மலச்சிக்கல், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். காலையில் எழுந்தவுடன் குறைந்தது வெதுவெதுப்பான நீர் 3 டம்ளர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்த 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும்.