நீருடன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
வெதுவெதுப்பான நீரில் சிறிது நெய் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்காக இன்று பலரும் பழங்கால உணவு முறைக்கும் இயற்கையான மருந்துகளுக்கும் மாறிக்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற, உடல் ஆரோக்கியமாக இருக்க, காலை எழுந்தவுடன் குறைந்தது ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பொதுவாக கூறுவதுண்டு.
இந்நிலையில் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சிறிது நெய் சேர்த்து குடித்தால் இன்னும் உடலுக்கு நல்லது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
நெய் என்றவுடன் கொழுப்பு என பலரும் கூறுவார்கள். ஆனால் அது நல்ல கொழுப்பு. நம் உடலுக்கு நல்ல கொழுப்புகள் தேவை.
எனவே குறிப்பிட்ட அளவுடன் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.
மேலும் நெய்யில் வைட்டமின் ஏ, இ, டி உள்ளன.
கிடைக்கப்பெறும் நன்மைகள்
இது மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.செரிமானத்தைத் தூண்டுகிறது.
நெய் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
வெதுவெதுப்பான அல்லது லேசான சூடான நீரில் நெய் சேர்ப்பதால் செரிமானக் கோளாறுகள் இருந்தால் சரியாகும், மேலும் உடல், சத்துகளை உறிஞ்சுவது அதிகரிக்கும்.
உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். எலும்புகள் இணையும் இடத்தில் உள்ள வலியை குறிப்பாக மூட்டு வலியை சரி செய்கிறது.
எலும்புகளை மேலும் வலுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இதிலுள்ள நல்ல கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது.
சருமத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து சருமம் பளபளப்பாக மாறும். மேலும் இதில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள், அறிவாற்றலை மேம்படுத்தும்.
மனநலனையும் மேம்படுத்தும். வாதம், பித்தம், கபம் எனும் மூன்று விஷயங்களை சரி செய்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.