தினமும் நீரில் இந்த ஒரு பொருளை கலந்து குடித்தால் என்ன என்ன நன்மைகள் தெரியுமா
முன்னோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணம் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருள் தான்.
அக்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியங்களையே மேற்கொண்டார்கள்.
இயற்கை வைத்தியங்கள் என்பவை வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி கொடுக்கக்கூடிய வைத்தியமாகும்.
சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுமே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. அதில் ஒன்று தான் பெருங்காயம்.
ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட பெருங்காயம்
பெருங்காயமானது ஒவ்வொரு சமையலிலும் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.
அதோடு பெருங்காயத்தை தினசரி உணவில் சேர்க்கும் போது, பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.
தினமும் 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழும்.
செரிமானம் மேம்படும்
பெருங்காயத் தூள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது.
தினசரி உணவில் பெருங்காயத் தூளை சேர்க்கும் போது செரிமான பாதையில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு அஜீரண கோளாறுகள் தடுக்கப்படும்.
அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை கலந்து குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராக இருக்கும் மற்றும் வயிற்றின் pH அளவு சீராக இருக்கும்.
எடை இழப்புக்கு உதவும்
பெருங்காயத் தூள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.
உடலின் மெட்டபாலிச அளவு அதிகமாக இருந்தால், உடல் எடை வேகமாக குறையும்.
இன்னும் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடியுங்கள்.
இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடையில் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
தலைவலி குறையும்
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவீர்களா? அப்படியானால் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடியுங்கள்.
இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைவலியில் இருந்து விடுபட உதவி புரியும்.
வெறும் வயிற்றில் பெருங்காய நீரைக் குடிக்கும் போது அது தலையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைத்து, தலைவலி வராமல் தடுக்கும்.
இரத்த சர்க்கரை அளவு குறையும்
சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காயம் மிகவும் நல்லது. ஏனெனில் பெருங்காயமானது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவி புரிகிறது.
அதுவும் இது கணைய செல்களைத் தூண்டி, இன்சுலினை அதிகம் உற்பத்தி செய்ய வைத்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
சிறப்பான பலனைப் பெற, பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.