பெலியத்த ஐவர் படுகொலை; சந்தேகநபர் இந்தியாவில் கைது
கொழும்பு - பெலியத்த ஐவர் படுகொலையின் சந்தேகநபர் இந்தியாவில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜன பல கட்சியின் செயலாளர் சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேக நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்திற்கு வழிவகுத்தவர்
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் ‘டபள் கெப் சூட்டி’ என அழைக்கப்படும் நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது அவரது சகாக்கள் இருவருடன் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சகாக்கள் என்றும், அவர் டுபாயில் இருந்து ஐந்து பேரின் கொலைக்கு வழிவகுத்தவர் என்றும் கூறப்படுகின்றது.
அதோடு ‘டபள் கெப் சூட்டி’, கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் சகா என்றும் கூறப்படுகிறது.
இந்த மூவரின் புகைப்படங்களுடன் இந்திய நாளிதழ் ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.