தோனி தானாக முன்வந்து பதவி துறக்கவில்லை; துரத்தப்பட்டாரா?
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி, தனது பதவியை தானாக முன்வந்து துறக்கவில்லை என்றும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) அவரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2017ஆம் ஆண்டு தோனி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைமைப் பதவியிலிருந்து விலகியமை தோனியின் சொந்த முடிவல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

தோனியின் சொந்த முடிவல்ல
விராட் கோலியை அடுத்த தலைவராகக் கொண்டுவருவதற்காக பிசிசிஐ தேர்வாளர்கள், தோனியை விலகுமாறும் அழுத்தத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தோனியைச் சந்தித்துப் பேசியதாகவும், அதன்பின்னரே அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவித்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைவராக நீடிக்க விரும்பிய போதிலும், 2019 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.