மட்டு ; சித்திவிநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற விநாயகர் பெருங்கதை பெருவிழா
மட்டக்களப்பு செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் காப்பு விரதத்தின் இறுதி நாள் பெருங்கதை பெருவிழா நேற்று (25) நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.
விநாயகர் பெருங்கதை விரதம், விநாயக சஷ்டி விரதம், அல்லது பிள்ளையார் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

21 நாட்கள் விநாயகர் பெருங்கதை விரதம்
இது கார்த்திகை மாத தேய்பிறை பிரதமையில் தொடங்கி மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை (21 நாட்கள்) அனுஷ்டிக்கப்படும் ஒரு சிறப்பு விரதம் ஆகும், இதன் மூலம் தடைகளை நீக்கி, சகல சௌபாக்கியங்களைப் பெற விநாயகப் பெருமானை வழிபடுவார்கள்.
அந்தவகையில் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகிய விநாயகர் பெருங்கதை விரதம் அடியார்க்களால் 21 நாட்கள் நேன்பிருந்து விரதத்தை அனுஷ்டித்தார்கள்.

ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி, பாராம்பரிய முறைப்படி பிள்ளையார் கதை படிக்கப்பட்டு, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, சுவாமி உள்வீதி வலம் வந்தது.
ஆலய கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயப்பிரத குருசிவ ஸ்ரீ திருவேரக சர்மா தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


