மட்டக்களப்பில் அதிபயங்கர பொருளுடன் இளைஞன் ஒருவர் அதிரடி கைது!
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (16-02-2022) மாலை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸாரால் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து தெரியவருவது, விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று மாலை ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானை காட்டுபகுதியை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.
மேலும், இதில் கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இளைஞன் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்