மட்டக்களப்பில் இரு பயங்கர விபத்து சம்பவங்கள்: 6 பேருக்கு நேர்ந்த நிலை
மட்டக்களப்பு மாவட்டம் - கல்முனை பிரதான வீதியில் இரண்டு இடங்களில் வெவ்வேறு விபத்துக்கள் இடமபெற்றுள்ளது.
இன்றைய தினம் (30-07-2023) மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடாவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கல்முனையில் இருந்து மாங்காய்களை ஏற்றிக்கொண்டு மினுவாங்கொடை நோக்கிச் சென்ற லொறி ஒன்று சாரதி தூக்கக்கலக்கத்தில் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் அமைந்துள்ள மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தின் போது லொறி பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக லொறி பாரிய சேதமடைந்துள்ளதுடன் பயணித்த லொறியின் நடத்துனருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நாவற்குடாவில் இன்றைய தினம் மற்றுமொரு விபத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மோட்டார் வண்டியில் தாயும் மகனும் பயணித்துள்ளனர்.
இதன்போது, இரும்பு, தகரம், உள்ளிட்ட, பொருட்களை வாங்கி வந்த நபர் ஒருவர் திடீரென துவிச்சக்கர வண்டியில் குறுக்கீடு செய்தமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.