கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்ற மனைவி; அரங்கேறிய சம்பவத்தால் அதிர்ச்சி
கணவர் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரால் கழுத்து வெட்டப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (17) மாலை குருணாகலில் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடிகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடிகமுவ பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குளிக்க சென்ற மனைவி கொலை
சந்தேக நபரான கணவர் மது போதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர், மனைவி குளிப்பதற்காக தனது பெற்றோரின் வீட்டிலிருந்து கிணற்றை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது கணவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள தெரிவித்த பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.