அமைச்சர் பசில் எதை விற்பதற்கு இந்தியா பறந்தார்? ஹர்சா டி சில்வா ஆவேசம்
இந்தியா விஜயம் செய்துள்ள பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) இன்று என்ன பேசியுள்ளார், எவற்றை விற்க முடிவு, செய்துள்ளார் என்று தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா (Harsha de Silva) கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையில் டொலர் பற்றாக்குறை நிவர்த்தி செய்கிறோம் என்று கூறினாலும் இன்று மருந்துகளின் விலை ரூபா. 62ல் உயர்ந்துள்ளது.
இது சரியா? உண்மையில் இப் பிரச்சனையிற்கு தீர்வு காண இந்தியாவிற்கு சென்று டொலர் பெற்றாலும் இப் பிரச்சனை நீடித்துக்கொண்டே போகும். ஆனால் வேலையிற்கு செல்லாமல் வரிசையில் நின்று மக்கள் எரிபொருள், வாங்குகின்றனர்.
இதேவேளை,நேற்று கொழும்பில் நாங்கள் போராட்டத்தின் போது வரிசையில் நின்றவர்கள் வருத்ததுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களிற்கு சரியான முறையில் தீர்வை வழங்க வேண்டும், முடியாது என்றால் தயவு செய்து இப் பதவியில் இருந்து விலக வேண்டும்.
நாளுக்கு நாள் மக்களின் சுமை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்றார்.