பசிலின் வருகையால் தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அண்மையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச, இன்று இலங்கை திரும்பவுள்ளார்.
அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்சியை ஒழுங்குபடுத்துவதற்காக மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
அவரது வருகையின் பின்னர் இதுவரை இழுபறியாக உள்ள அமைச்சரவை நியமனங்களும், ஆளுநர் நியமனங்களும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியதாகியுள்ளது.