இந்தியப் பிரதமர் மோடியை சற்று முன்னர் சந்தித்தார் பசில்
இரண்டாம் இணைப்பு
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு நிதி அமைச்சர் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இல்லையெனில் மார்ச் 30 அன்று இலங்கையால் நடத்தப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்து
முதலாம் இணைப்பு
இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
அதேசமயம் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுப் பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். அவரின் இந்த விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக நிதி அமைச்சர் இந்தியாவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடன் வசதியானது, அரிசி, கோதுமை, சீனி மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கென என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.