விமான நிலையத்தில் VIP சேவையை ஓசியில் அனுபவித்த பசில்! பெரும் தொகைக்கு துண்டு
ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் , உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பசில் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.
Gold Route சேவை
பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக விமான நிலையத்தில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனினும் அதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை என கூறப்படுகின்றது.
அத்துடன் , பசில் விமான நிலையத்தில் Gold Route சேவையை பெற்றிருந்தார். இதற்காக ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர் அறவிடப்படும். எனினும் இதையும் அவர் செலுத்தவில்லை.
மேலும் இன்றுவரை பணம் செலுத்தாமல் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் VIP ஓய்வறையை பயன்படுத்தியதை விமான நிலைய வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.