கோட்டாபாயவால் இலங்கைக்கு கைநழுவிப்போன சந்தர்ப்பம்; பங்களாதேஷ் நிறைவேற்றியது!
ஜப்பானிய நிதியுதவியின் கீழ் தலைநகர் டாக்காவில் கட்டப்பட்ட நாட்டின் முதல் இலகு ரக ரயில் சேவையை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார்.
ரயில்வே திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் பங்களாதேஷத்தின் தலைநகரான டாக்காவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பல நன்மைகளை வங்கதேசம் பெறும்.
ஜப்பானின் JICA
இலகு ரக ரயில் சேவைக்கான நிதியை ஜப்பானின் JICA வழங்கியது. இந்த இலகு ரக ரயில் சேவை 2030ஆம் ஆண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
அதன் முதற்கட்டமாக செலவிடப்பட்ட தொகை 2.8 பில்லியன் டாலர்கள்.அதற்கான நிதியை JICA வழங்கியது. இதன் கீழ், ஒவ்வொரு மணி நேரமும் 60,000 பேருக்கு சேவை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை ஜப்பானின் JICA வழங்கிய சலுகைக் கடனின் கீழ், கொழும்பை மையமாகக் கொண்டு இதேபோன்ற இலகு ரயில் திட்டம் இலங்கையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் ஜப்பானின் இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.