லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடத்திற்கு முன்னேறிய பெங்களூர் அணி
18ஆவது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகின்ற நிலையில், இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன.
அதன்படி, லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 70ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியிற்கான நாணயசுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லகக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுகள் இழப்பி்ற்கு 227 ஓட்டங்களை பெற்று பெங்களூர் அணிக்கு 228 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 04 விக்கெட்டுகள் இழப்பி்ற்கு 230 ஓட்டங்களை பெற்று வெற்றியடைத்தது.