மேற்கத்தைய நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் அதிரடி தடை; எது தெரியுமா!

Sri Lanka Sri Lankan Peoples Smoking NPP Government
By Sulokshi May 03, 2026 07:38 AM GMT
Report

இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்ய அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஆனந்த ரத்நாயக்க இது குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அதன்படி, 

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைத்து, மின்-சிகரெட்டுகள் மற்றும் 'வேப்பிங்' (Vaping) சாதனங்களின் விற்பனை, இறக்குமதி, உற்பத்தி ஆகியவற்றுடன் அவற்றைப் பயன்படுத்துவதையும் முழுமையாகத் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த எவரும் தமது வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாதவாறு சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.

புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் போது, வாடிக்கையாளரின் அடையாள அட்டையைச் சோதித்து அவர் 2010க்கு முன் பிறந்தவரா என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரம் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.

அதேவேளை மாலைதீவு (2007க்கு பின் பிறந்தவர்களுக்கு), ஐக்கிய இராச்சியம் (2009க்கு பின் பிறந்தவர்களுக்கு) போன்ற நாடுகள் ஏற்கனவே இவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது பாரிய குற்றமாகக் கருதப்பட்டு ஆயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே போன்றதொரு கடுமையான போக்கை இலங்கையிலும் கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடமிருந்து மின்-சிகரெட் சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

எனினும், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டங்கள் இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளன. புதிய திருத்தங்கள் மூலம் இவற்றைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதமாக்கப்படும்.

"எதிர்காலத் தலைமுறையினரைப் புகையிலை மற்றும் மதுசாரத்தினால் ஏற்படும் தீமைகளிலிருந்து பாதுகாப்பதே எமது நோக்கம். இதற்காக 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்," என கலாநிதி ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இந்த முன்மொழிவுகளுக்குத் தனது இணக்கத்தைத் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் இவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US